‘கோல்ட் கால்’ படத்தின் டீசர் ரிலீஸ்
அறிமுக இயக்குனர் தம்பிதுரை இயக்கத்தில் கேசவ மூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோல்ட் கால்’. முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படம் பற்றி இயக்குனர் தம்பிதுரை கூறியது, கோல்ட் கால் இன்றைய ரசிகர்களோடு ஆழமாக இணையும் ஒரு கதை. டைட்டில் மற்றும் டீசரை பார்க்கும்போது சஸ்பென்ஸ், காமெடி டிராமா படம் போல் தெரிந்தாலும் வேறு ஒரு விஷயம் இருக்கிறது. தற்போது டீசரைப் பார்த்து பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தி வரும் நிலையில் அடுத்த சில மாதங்களில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக அமையும் என்றார்.