வில்லுப்பாட்டு மாதவியை பாட வைத்த ஜிப்ரான்

வில்லுப்பாட்டு மாதவியை பாட வைத்த ஜிப்ரான்
வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனி அடையாளம் பெற்ற கலைஞர் மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்றாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.தன் வில்லிசைக் கலைக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். தனது தனித்துவமான குரலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள மாதவி, தற்போது ‘வேட்ட சாமி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையில் அவர் பாடிய ‘சுடலை மாடன் வேட்டை’ என்ற பாடல்,சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.7 மைல்ஸ் பர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள இப்படத்தில்,நடிகர் அருள்நிதி, அமீர் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை, ‘பம்பர்’ படத்தை இயக்கிய எம். செல்வகுமார் இயக்கியுள்ளார்.

Comments (0)
Add Comment