கெவி- விமர்சனம்
தயாரிப்பு-அர்ட்அப் ட்ரையாங்கிள் பிலிம் கம்பெனி
இயக்கம்-தமிழ் தயாளன்
நடிகர்கள்-ஆதவன், ஷீலா, வினோத் மோகன், சார்லஸ் வினோத்
ரேட்டிங்-2.75/5
கதைக்களம்
கொடைக்கானல் மலைப் பகுதியில் எந்தவித மருத்துவ வசதிகள் இல்லாத கெவி கிராமத்தில் கர்ப்பிணி மனைவி ஷீலாவுடன் வாழ்ந்து வரும் ஆதவன் மருத்துவ வசதி கேட்டு அரசியல்வாதிகளிடம் போராடுகிறார். இதனால் போலீசாரின் பகைக்கு ஆளாகி சித்திரவதை அனுபவிக்கிறார். அதன் பிறகு நடந்தது என்ன? அந்த கிராமத்துக்கு மருத்துவ வசதி கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.
பிளஸ் & மைனஸ்
மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன். கதை நாயகனாக நடித்துள்ள ஆதவன் மற்றும் கதாநாயகி ஷீலா ஆகியோர் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதோடு படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் தங்கள் பங்களிப்பு சிறப்பாக கொடுத்துள்ளனர். இருப்பினும் படம் முழுக்க இதே காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது ரசிகர்களுக்கு சோர்வை தருகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கமர்சியல் அம்சங்கள் சேர்த்து இருந்தால் ரசிக்கும்படியாக இருந்தும்.
ஜெகன் ஜெயசூர்யாவின் ஒளிப்பதிவு படத்திற்க்கு பெரிய பிளஸ். கொடைக்கானல் மலை அழகை கண்முன்னே நிறுத்தி இருக்கிறார். அதேபோல் கவிஞர் வைரமுத்து வரிகளில் 2 பாடல்களுக்கு உணர்வுபூர்வமான இசையை பால சுப்பிரமணியன் கொடுத்திருக்கிறார்.
கெவி-மலைவாழ் மக்களின் கண்ணீர் மழை