ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
“ஈரான் அரசு தனது எல்லையை மீறிவிட்டது; ஈரான் ஆட்சியாளர்கள் வன்முறை மூலம் ஆட்சி செய்கிறார்கள்
ஈரான் விவகாரத்தில் விரைவில் உறுதியான முடிவை எடுப்போம்” – டிரம்ப்
புதிய உச்சத்தில் தங்கம்
இதுவரை இல்லாத அளவிற்கு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.1,04,960க்கு விற்பனை
ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,120க்கு விற்பனை
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 4 ல் விஜய் விமானம் தரை இறங்கியது
டெர்மினல் 4 விஐபிக்கள் மட்டும் பயன்படுத்தும் சிறப்பு விமான நிலையம்
இதில் பொது மக்கள் யாருக்கும் பயன்படுத்த அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 18 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. டி.ஆர்.டி.ஓ-வால் உருவாக்கப்பட்ட மேம்பட்ட புவி கண்காணிப்பு-ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் செயற்கைக் கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி-சி62. ஸ்பெயின், மொரீஷியஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 17 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டது
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2025ல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான ஐபோன்கள் மதிப்பு 85% அதிகம் என்பது தெரியவந்துள்ளது. 2021ல் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடங்கப்பட்டு முதல் முறையாக ஓராண்டில் 2 டிரில்லியன் டாலர் ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் லாஞ்ச் தோல்வியை சந்தித்துள்ளது இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை 10.17 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப்பாய்ந்தது PSLV C-62 ராக்கெட். ‘EOS-N1 Anvesha’ என்ற செயற்கைகோள் ஏந்திச் சென்ற இந்த ராக்கெட் 2 ஸ்டேஜ்களை அற்புதமாக கடந்த நிலையில், 3வது ஸ்டேஜில் தோல்வியை சந்தித்துள்ளது.
வளநாடு பகுதியில் மயில்களை வேட்டையாடிய 5 பேர் கைது!!
மணப்பாறை: வளநாடு பகுதியில் மயில்களை வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மயில்களை வேட்டையாடிய புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி, கார்த்தி, திருப்பதி, பரத்குமார், கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
5 பேரையும் கைது செய்து நாட்டுத் துப்பாக்கி, 4 செல்போனை பறிமுதல் செய்த போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்!!
மைக்ரோசாஃப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார்.
2021ல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டிருந்தார் பில்கேட்ஸ்.
ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கிய நிலையில், இறுதியாக தற்போது ரூ.71,100 கோடி வழங்கப்பட்டுள்ளது.