சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் திருமதி பத்மா அவர்கள் நேற்று (11.1.2026) சென்னை, தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
தமிழ் மணம் திட்டத்தின் கீழ் அயலகத் தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விஜய்யிடம் முதல் நாள் விசாரணை முடிந்தது
கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட முதல் நாள் விசாரணை இன்று நிறைவு பெற்றது. இரண்டாவது நாளாக நாளை (ஜனவரி 13) காலை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விசய் ஆஜராகவுள்ளார்
16 ஆண்டுகளுக்குப் பிறகு லிபியா வந்த நோக்கியா போன்கள்
லிபியாவில் 2010 ஆம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட நோக்கியா மொபைல் போன்கள் அடங்கிய ஒரு கப்பல், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இறுதியாக லிபியாவின் தலைநகர் திரிப்போலியில் உள்ள ஒரு கடையை வந்தடைந்துள்ளது.
2011 இல் வெடித்த உள்நாட்டுப் போர் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு சரிவு காரணமாக 2010 ஆம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட நோக்கியா மொபைல் போன்கள் 16 ஆண்டுகளாக கிடங்குகளில் சிக்கித் தவித்தன.
இந்த மொபைல் போன்கள் கடைக்கு வந்தடைந்ததை கடைக்காரர் அதனை unboxing செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “இவை தொலைபேசிகளா அல்லது வரலாற்றுப் பொருட்களா?” என்று நக்கலாகக் கேட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் சென்னை திரும்ப சிபிஐ அனுமதி
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் நாளையும் சிபிஐ விசாரணை தொடரும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து நாளை (ஜனவரி 13) விசாரணை கேன்சல் செய்யப்பட்டது. இருப்பினும் தேவைப்பட்டா மறுபடியும் சம்மன் அனுப்புவோம் நீங்கள் ஆஜராகோணும் மென்று கட்டளை இட்டு கையெழுத்து வாங்கி அனுப்பியுள்ளனர். இதை அடுத்து நாளை காலை அதே சார்ட்டட் பிளைட்டில் சென்னை ரிட்டர்ன் ஆகிறார் விஜய்.
மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்
சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்து சூரிய தேவருக்கு பூஜை செய்து வழிபட்டனர். அதோடு மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் ஆகியவற்றுடன் முளைப்பாரி எடுத்து வந்து ஒரு கிராமத்தில் நடக்கும் பொங்கல் திருவிழாவை போல் அசத்தலாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு உங்களை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேதி: 12.01.2026
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
தலைமை கழகம்
பொங்கல் விழா செய்தி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நாளை (13.01.2026) காலை 10 மணிக்கு புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில், தலைமை கழகம் (கேப்டன் ஆலயம்) கோயம்பேட்டில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு செய்தியை சேகரித்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தேமுதிக
கேப்டன் ஆலயம்
தலைமை கழகம்
கோயம்பேடு
சென்னை – 107
*சிவகார்த்திகேயனுக்கு ரஜினி பாராட்டு*
பாராசக்தி படத்தை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்