திரில்லர் படத்தில்  காயத்ரி ரெமா

திரில்லர் படத்தில்  காயத்ரி ரெமா

மாண்புமிகு பறை படத்தில் ஹீரோயினாக நடித்த காயத்ரி ரெமா அடுத்ததாக கண்ணால் காண்பது பொய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் மற்றும் கிரைம், திரில்லர் பாணியில் உருவாகி யுள்ள இந்த படத்தை மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கி உள்ளார். இதில் ஹீரோவாக ஆர்.எஸ். கார்த்திக் நடித்துள்ளார். படத்திற்கு டி.கே.எம் உதயகுமார் இசையமை க்க கபிலன், கே.ஜே. அய்யனார், ராஜா குருசாமி ஆகியோர் பாடல்களைஎழுதியுள்ளனர். அதில் ஒரு பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார்.  இந்தப் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை காளிமுத்து என்டர்பிரைசஸ் சார்பில் குமார் தட்சிணாமூர்த்தி ரூ 7 கோடிக்கு வாங்கி இருக்கிறார்.

Comments (0)
Add Comment