காந்தி டாக்ஸ்- விமர்சனம்

காந்தி டாக்ஸ்- விமர்சனம்
மும்பையில் ஒரு லோயர் மிடில் கிளாஸ் மனிதராக இருக்கும் விஜய் சேதுபதி, பண நெருக்கடி, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு நடுவே வாழ்ந்து வருகிறார். மறுபக்கம் பணக்காரரான அரவிந்த் சாமி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, சொத்துக்களை இழக்கிறார். இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக்கொள்ள அதன் பிறகு நடந்தது என்ன? என்பதே மீதி கதை. இந்திய சினிமாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு வசனங்களின்றி உடல் மொழி மூலம் கதையை ரசிகர்களுக்கு கடத்தும் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கிஷோர் பாண்டுரங்கா பெலேக்கர்.ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை போராட்டத்தை மிக அமைதியாக சொல்ல முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் தன் பாதையை விட்டு விலகவில்லை.அடுத்ததாக படத்தின் மொத்த உணர்வையும் தனது இசையின் மூலம் ஏ ஆர் ரஹ்மான் உயிர் கொடுத்துள் ளார். வசனங்களுக்கு பதிலாக தனது இசையையே பேச வைத்துள்ளார்.விஜய் சேதுபதி பார்வை, உடல் மொழி,முகபாவம் மூலம் கவர்ந்து இருக்கிறார். அரவிந்தசாமி குறைந்த காட்சிகளில் வந்தாலும் கதைக்கு தேவையான தை செய்துள்ளார்.அதிதி ராவ் உணர்வுப்பூர்வ மான நடிப்பை தந்துள்ளார் கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

Comments (0)
Add Comment