ஜி.எஸ்.வசீயின் ‘ அம்பானி டா ‘ மியூசிக் வீடியோ ஆல்பம்

ஜி.எஸ்.வசீயின் ‘ அம்பானி டா ‘ மியூசிக் வீடியோ ஆல்பம்
‘மத்தாப்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ஜி.எஸ்.வசீ,தற்போது ‘அம்பானி டா’ எனும் சுயாதீன வீடியோ இசை ஆல்பத்தை பாடல் எழுதி, பாடி, நடனமாடி, நடித்து, இயக்கி இருக்கிறார்.ஏ ஆர் ஆனந்த் இசையமைத்திருக்கும் இந்த ஆல்பத்தை வி ராக் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது குறித்து ஜி. எஸ். வசீ கூறியது,’ நான் இதற்கு முன் இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளேன்.இயக்குநர் நாகராஜ் இயக்கத்தில் 2012 ல் வெளியான ‘மத்தாப்பு’ படத்தில் வில்லனாக நடித்து என் திரை பயணத்தை தொடங்கினேன். அதனைத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்த போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினேன். 2 ஆண்டு கட்டாய ஓய்விற்கு பிறகு தற்போது உடல் நல சவால்கள் இருந்தாலும்,மன உறுதியோடு இந்த சுயாதீன வீடியோ இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளேன் என்றார்.

Comments (0)
Add Comment