ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக்
ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரபிரகாஷ் தயாரித்துள்ள படம் ஃபிளாக்.இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பி பொன் சங்கர். இசை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம். இப்படத்தில் தீஹான் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் போஜ்புரியை சார்ந்த அனந்த் பெங்காளியை சேர்ந்த பப்புஷா மற்றும் கேரளா, கர்நாடகாவை சேர்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர்.இப்படம் பற்றி இயக்குனர் கூறியது,10 வயது சிறுவன் தீஹான் தன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான், ஒரு முக்கிய சூழ்நிலையில் அவன் டெல்லிக்கு போகிறான். ஆனால் வழி தெரியாமல் அவன் இந்தியா முழுக்க பயணிக்கிறான் ஒரு கட்டத்தில் தீவிரவாத கூட்டத்திலும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது, அதன் பிறகு என்ன என்பதே படத்தின் கதை. இப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது என்றார்.