தமிழினி படத்தின் பர்ஸ்ட் லுக்
துபாயில் நடைபெற்ற சர்வதேச குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற “பனையேறி” குறும்படத்தை தயாரித்த திசையன் விளையை சேர்ந்த சரவணன் மற்றும் இயக்குநர் கணேஷ் மூர்த்தி ஆகியோர், தற்போது “தமிழினி” என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.இதில் விஜே. ஆசிக் மற்றும் பிரதீப் ராஜ் ஹீரோவாக நடித்த,ஷாஷா சிவகுமார் மற்றும் புஷ்ப லதா ஹீரோயின் ஆக நடித்துள்ளனர். மேலும் தீபா சங்கர், பெஞ்சமின், வின்சென்ட் ராய் மற்றும் தயாரிப்பாளர் சரவணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். மீனவ மக்களின் வாழ்க்கையை பற்றி பேசும் இப்படத்தின் படப்பிடிப்பு முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.