முனீஸ்காந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்
காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருக்கும் முனீஸ்காந்த் கதை நாயகனாக நடித்திருக்கும் ‘தி டோர்ம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள இதில் சோசியல் மீடியா பிரபலங்களான சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து, பெரோஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்ய,ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ ஆகியோர் இசையமைத்துள் ளனர். இந்த படத்தை குட் ஸ்டஃப் புரொடக்ஷ ன்ஸ் சார்பில் ஈ.ஆர்.டில்லி பலராமன், ஜெகதீஸ்வரன் டில்லி ஆகியோர் தயாரித்துள்ளனர்.