மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
ரீல் பெட்டி புரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “மேரேஜ் ஸ்டோரி.”இந்தப் படத்தில் எஸ்.பி.சித்தார்த், ஷபானா ஷாஜகான் ஆர்யா மற்றும் தீபிகா வெங்கடாச்சலம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ், புதுவை பூபாலன் ஆகியோர் நடித்துள்ளனர். நட்பு, காதல் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்திற்கு தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.