மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக்
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தை க்ளீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாராகிறது. இப்படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மகா அவதார் நரசிம்மா படத்தை இயக்கியவர் ஆவார். பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.இந்தப் படம் டிசம்பர் 2027-ல் வெளியாக உள்ளது. ஏற்கனவே ஹோம்பாலே பிலிம்ஸ் “மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்”ஐ அறிவித்து அதன் முதல் படியாக நரசிம்மா படத்தை உருவாக்கியது தற்போது இரண்டாவது அவதாரமாக பரசுராம் உருவாகிறது. அனிமேஷன் தொழில்நுட்பம் மூலம் இது பிரம்மாண்டமாக தயாராகிறது.