‘ஹலோ மிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

‘ஹலோ மிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்
நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’.  இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.இதில் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி. ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ்,கேபிஒய் சரத், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு மேற்கொள்ள, பிரின்ஸ் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. காதல், இளமை மற்றும் ரசரையோடு உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

Comments (0)
Add Comment