துல்கர் சல்மான்,பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கிறார். மனதை வருடும் காதல் கலந்த இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சூட்டிங் முடிந்த நிலையில் இந்த படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’என்ற டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர் . இந்த படத்திற்கு அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவை செய்ய, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.