தந்தை, மகன் உறவை பேசும் ‘ஃபாதர்’
இயக்குநர் ஆர். சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை, மகன் இடையேயான ஆழமான பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத் தப்பட்ட உறவை மையமாகக் கொண்டு உருவாகியு ள்ள இப்படத்தில் டார்லிங் கிருஷ்ணா மகனாகவும், பிரகாஷ் ராஜ் தந்தையாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். தற்போது வெளியாகி உள்ள டீசர் படத்தின் முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், அதன் உணர்வுப்பூர் வமான களத்தையும், முன்னணி நடிகர்களின் வலுவான நடிப்பையும் மட்டும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் படத்தின் மையக் கருவான தந்தை,மகன் உறவு குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. மேலும், பிரகாஷ் ராஜ்,டார்லிங் கிருஷ்ணா இருவருக்கும் இடையேயான திரை உறவு குறித்தும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.