3 ஹீரோயின் இருந்தும் ரொமான்ஸ் இல்ல: சூர்யா ஆதங்கம்
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா, நேகா ஆகியோர் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி வெற்றியை பெற்ற ‘மவுனம் பேசியதே’ படம் மீண்டும் காதலர் தினத்தையொட்டி 13 ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 24 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆன மவுனம் பேசியதே படம் இப்போதும் பலரது விருப்ப படமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அமீரின் முதல் படம். என் படங்களில் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. திரிஷா, லைலா, நேகா என 3 கதாநாயகிகள் இருந்தும் ரொமான்ஸ் எதுவும் இல்லை. ஒருவரை கூட கட்டிபிடிக்கவில்லை.நீங்கள் இந்த படத்தை தியேட்டரில் எப்படி எல்லாம் வரவேற்க போகிறீர்கள் என்பதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் என்றார்.