கௌதம் மேனனின் ‘என்னோடு வா வீடு வரைக்கும்’
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டு சினிமா பயணத்தை போற்றும் வகையில், ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் வரும் பிப்ரவரி 1ஆம் நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில், கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களில் பணியாற்றிய பாடகர்கள் கார்த்திக்,சித் ஸ்ரீராம், பிளேஸ்,பால் டப்பா, ஆல்போன்ஸ், ஷாஷா திருப்பதி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா மற்றும் சாருலதா மணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த இசை நிகழ்ச்சியை ப்ரீத்தி ஸ்ரீவிஜயனின் ‘ஒரு ஊரிலே ஒரு ஃபிலிம் ஹவுஸ்’ மற்றும் சித்து நாயர் இணைந்து தயாரிக்கின்றனர்.