3000 கோடி கிளப்பில் இணைந்த ‘துரந்தர் ’
ரன்வீர்சிங், சாரா அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ மற்றும் துரந்தர் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ‘துரந்தர் 2’ படம் திரைக்கு வந்து சர்வேதச அளவில் ரூ.1,700 கோடியை கடந்து சாதனை படைத்தது. இதன் மூலம் பாலிவுட் திரை உலகில் குறுகிய காலத்தில் 1500 கோடி வசூலைக் கடந்த படம் என்ற பெருமையை பெற்றது. அதோடு துரந்தர் முதல் பாகம் ரூ.1,300 கோடி வசூலை பெற்ற நிலையில் மொத்தத்தில் ‘துரந்தர்’ படம் ரூ.3 ஆயிரம் கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 3000 கோடி கிளப்பில் துரந்தர் படம் இணைந்துள்ளது.