ஓணம் பண்டிகைக்கு துல்கரின் ஐயம் கேம்
தென்னிந்திய அளவில் பிசியான நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் தற்போது நஹாஸ் ஹிதயத் இயக்கத்தில் ஐயம் கேம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்திற்கு அன்பறிவ் சண்டைக் காட்சிகள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, இப்படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழு அறிவித்துள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என போஸ்டருடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஓணத்திற்கு நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா, நிவின் பாலி நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.