அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தின் டப்பிங் பணி துவக்கம்
டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படத்தை மதன் இயக்கி வருகிறார்.சில மாதங்களுக்கு முன்னர் தான் இப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு படு வேகமாக படப்பிடிப்பை முடித்து, தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் துவக்கியுள்ளது.இன்னும் தலைப்பிடப்படாத இப்படம்,முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், காதல் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தை எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார்.இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க,ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.