ரிலீஸ்க்கு தயாரான ‘திரௌபதி 2 ‘

ரிலீஸ்க்கு தயாரான ‘திரௌபதி 2 ‘
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள ’திரௌபதி 2’ திரைப்படம் ஒரு வரலாற்று ஆக்சன் திரைப்படமாகும். 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் ஒரு மதத்தினர் வேரூன்றிய கதையை பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி யுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து சென்சார் சான்றிதழ் பெற்றுள்ள நிலையில், படத்தை இம்மாத இறுதியில் ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஜோடியாக ரக்ஷனா இந்து சுதன் நடிக்க, முக்கியமான கேரக்டரில் நட்டி நடராஜ் நடித்துள்ளனர்.முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர் சிராக், முக்கிய வில்லனாக மிரட்டி உள்ளார்.நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

Comments (0)
Add Comment