டோரதி உலக அளவில் பேசும் படமாக இருக்கும்: கீர்த்தி சுரேஷ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் டோரதி. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். மதுரையை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படம் வரும் 25-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.இதையொட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பேசியது, டோரதி படத்தில் மலையாள பெண்ணாக நடிக்கிறேன். இதுவரை பல கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த கேரக்டர் ரொம்ப புதுசு. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கனவு படத்தில் எனக்கு பிடித்த, மனதில்
நிற்கிற கேரக்டரில் நடித்துள்ளேன். நான் இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை.மதுரை என்றாலே எனக்கு ஜிகர்தண்டா பிடிக்கும். அடுத்தது மீனாட்சியம்மன் கோவில்.இந்த படமும் மதுரையை கதைக் களமாக கொண்டு உருவாகியுள்ளது. ரிஷியும், சனந்தும் சூப்பராக நடித்துள்ளனர். டோரதி படம் உலக அளவில் பேசும் படமாக இருக்கும் என்றார்.