ரூட் படத்தின் வில்லன் யார் தெரியுமா?
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சூரிய பிரதாப் எழுதி இயக்கி உள்ள படம் ‘ரூட்’.இதில் கௌதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடித்த,பவ்யா திரிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி,ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர். வெரஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப்,சஞ்சய் சங்கர், ராஜராஜன், ஞான சம்பந்தம்,தனிஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்துள்ளனர். ஷூட்டிங் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்ற நிலையில்,படத்தை ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். படம் பற்றி இயக்குனர் சூரிய பிரதாப் கூறியது, இதில் கௌதம் ராம் கார்த்திக் போலீஸ் அதிகாரி கேரக்டரில் பிட் ஆகியுள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் அபார்சக்தி குரானா நடித்துள்ளார். அதோடு அவரே டப்பிங்கும் பேசியுள்ளார்.திரில்லர் படமாக தொடங்கும் இதில் வேறு ஒரு மாறுபட்ட கதையும் உள்ளது. தியேட்டரில் படம் பார்க்கும் போது அந்த சஸ்பென்ஸ் உங்களுக்கு புரியும்.