நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மலையாள சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கி தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டு, அதன் பிறகு தெலுங்கு, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் நயன்தாரா தற்போது பாலிவுட்டையும் கலக்கி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அடைமொழியுடன் தென்னிந்திய ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையிலும் இன்னும் முன்னணி கதாநயகியாக ஜொலித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த வாரம் டாக்ஸிக் மற்றும் ஹாய் என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் நயன்தாரா தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை மற்றும் சம்பளம் குறித்து அளித்த பேட்டியில் கூறியது, சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு பிரபல வார பத்திரிக்கையின் அட்டைப்பட படப்பிடிப்பிற்காக என்னை அணுகினார் கள். அந்த போட்டோ சூட்டுக்காக எனக்கு ரூ.2000 சம்பளமாக தந்தனர். அதற்கு முன்பு ஒரு சம்பளம் வாங்கினேன். அது எனது குழந்தை பருவத்தில் என் தந்தையின் நகத்தை வெட்டிய தற்காக எனக்கு ரூ.500 கிடைத்தது . ஆரம்பத்தில் நான் சினிமாவில் நடிப்பதற்க்கு எந்த திட்டமும் என்னிடம் இல்லை. மாடலாக பணியாற்றிக்கொண்டிருந்த போது ஒரு பத்திரிக்கையில் என்னுடைய அட்டை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சத்யன் அந்திக்காடு, 2003-ல் மனசினக்கரே என்ற படத்தில் என்னை நடிக்க வைத்தார். அது தான் என் முதல் திரையுலக அனுபவம். தமிழில் இயக்குனர் ஹரி என்னை அய்யா படம் மூலம் அறிமுகப்படுத்தினார். நான் இந்த இடத்துக்கு வர அவர்கள் இருவரும் தான் காரணம் என்றார்.

Comments (0)
Add Comment