பிரபலங்கள் பலர் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடுகளில் உள்ள கடற்கரை தீவை நோக்கி படையெடுக் கின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையும், ‘கங்குவா’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவருமான திஷா பதானி, கோடை விடுமுறையை ஜாலியாக என்ஜாய் செய்வதற்காக தாய்லாந்துக்கு சென்று உள்ளார். அங்கு உள்ள கடற்கரை தீவு ஒன்றில் பிகினி உடையில் அமர்ந்து சன் பாத் எடுத்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கிறங்கிப் போய் விடுகின்றனர்.