பாரதிராஜாவை சந்தித்த இயக்குனர்கள்
இயக்குனர் பாரதிராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து 24 மணி நேரமும் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரைப் பற்றி சமூக வலைதளம் மற்றும் சில நாளிதழ்களில் தவறான செய்தி வெளியானது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த மன வேதனை அடைந்து உள்ளனர். இதனையில் நேற்று பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரிப் பதற்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி, அமீர், லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், சீமான், சீனு ராமசாமி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, சித்ரா லட்சுமணன் மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு ஐ சி யு வில் இருக்கும் பாரதிராஜாவை பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை அதனால் அவரது மகளிடம் நல்ம விசாரித்தனர். அதோடு மருத்துவமனை நிர்வாகத்திடமும் பாரதிராஜா உடல்நிலை குறித்து தினமும் மருத்துவ அறிக்கை தரும்படி அறிவுறுத்தி உள்ளனர். எனவே சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.