“ ஏன் என்னை ஏதோ செய்தாய்” பட டைட்டில் சுவாரஸ்யம் சொன்ன இயக்குனர்
அந்தோணிஸ் அட்லீயர் நிறுவனம் சார்பில் , டி. ஆண்டனி தயாரித்து,இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. இதில் ஹீரோயினாக மதுமிதா நடித்துள்ளார். இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ள ரஇப்படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதை ஒட்டி நடைபெற்ற ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில்.ன டி. ஆண்டனி பேசியது, இந்த படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா கொடுத்தார். முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர். அவருடைய வாழ்த்துகளும் தொடர்ந்து எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன. என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார்.