125 கோடிக்கு கைமாறிய டிஜிட்டல் உரிமை
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா படம் 2022ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1′ உருவாகியுள்ளது.இப்படம் அக்டோபர் 2ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ஓடிடி தளம் ரூ. 125 கோடிக்கு வாங்கியுள்ளது. ரிலீஸ்க்கு முன்பு 100 கோடிக்கு மேல் காந்தாரா சாப்டர்-1படம் வியாபாரம் ஆகியிருப்பது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.