கமலுடன் மட்டும் நடிக்கவில்லை: யோகி பாபு
ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள 300-வது படம் அர்ஜூனன் பேர் பத்து.இதில் கதாநாயகியாக அனாமிகா மாஹி நடிக்க, காளிெவங்கட், அருள்தாஸ், மைனா நந்தினி, சுப்பிரமணிய சிவா, லெனின் பாரதி, சென்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். தங்கபாண்டி,கிருத்திகா தங்கபாண்டி இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் 17-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த இசை,டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் யோகி பாபு பேசியது, இது300-வது படம் என நம்மை நாமே பெருமை படுத்திக் கொள்ளக் கூடாது.இது பத்தாது, நாகேஷ், மனோரமா அந்த லெவலில் போகணும் என ஆசைப்படுகிறேன். 2016-ம் ஆண்டிலேயே நயன்தாராவுடன் நடித்து விட்டேன். இந்த ஹீரோயினுடன் நடிக்க வில்லை என்ற கவலை எனக்கு இல்லை. கதை தான் நமக்கு முக்கியம்.அனாமிகா என்னுடன் நடித்ததற்கு நன்றி. அதேபோல் எல்லா பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டேன். இன்னும் நடிகர் கமலுடன் மட்டும் நடிக்கவில்லை அதுவும் விரைவில் நடக்கும் என நம்புகிறேன் என்றார்.