நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசை: சர்வா
ஹார்ட் பீட் வெப் சீரீஸில் குணா என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இளம் நடிகர் சர்வா. இப்போது சினிமாவில் கால் பதித்துள்ளார். சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற சர்வா, கல்லூரியில் படிக்கும் போதே பல நாடகங்களில் நடித்துள்ளார், தற்போது வெப் சீரிஸில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, வெள்ளித்திரையிலும் அசத்தி வருகிறார். ஆர்.கே. நகர, தமிழ் ராகர்ஸ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், தற்பொழுது, அதர்வா நடிப்பில் வரும் 12ம் தேதி வெளியாக உள்ள தணல் படத்திலும் நடித்துள்ளார். தனது நடிப்பு திறனை வெளிப்படுத்த, நெகட்டிவ் ரோல்களை கேட்டு வரும் சர்வா , நெகட்டிவ் ரோல்ஸ் கிடைக்கும் போது தான் நடிப்பின் பல பரிமாணங் களைக் காட்ட முடியும் என கூறியுள்ளார்.