டார்க் ஜியண்ட்- விமர்சனம்
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஒருவன், திடீரென கிடைக்க போகும் சொத்தை நம்பி கிராமத்திற்குச் செல்கிறான். ஆனால் அங்கு சொத்துக்கு பதிலாக அவனுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கிறது.அமானுஷ்யங்களும், மர்மங்களும் நிறைந்த அந்த ஊரிலிருந்து அவன் எப்படி மீண்டான் என்பது தான் மீதி கதை.சொத்துக்காக தொடங்கும் பயணம், எப்படி மர்மமும் திகிலும் நிறைந்த இருண்ட அனுபவமாக மாறுகிறது என்பதை இயக்குனர் கே.எஸ்.கிஷான் திகிலுடன் சொல்லி உள்ளார். திரைக்கதை ஆங்காங்கே தடுமாறினாலும்,திகில் ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும். ஒரு மிடில் கிளாஸ் வீட்டு இளைஞனாக ஆதர்ஷ் மதிகாந்த் அழகாக நடித்துள்ளார்.ஜோவிதா லிவிங்ஸ்டனும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.அருவி மதன், சோனியா அகர்வால், அமுதவாணன், ரபிக் பாட்ஷா,கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன் உட்பட அனைவரும் கதைக்கு வலு சேர்க்கிறார்கள். விக்னேஷ் ராஜாவின் இசை, சங்கீத் மணி கோபாலின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம்.