ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள சிந்தியா லூர்டே
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த படம் நேற்று வெளியான நிலையில், நடிகை, தயாரிப்பாளர் சிந்தியா லூர்டே, தனது அனலி பட அனுபவம் குறித்து கூறியது, “வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு ‘அனலி’ என்னுடைய 3வது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் சப்ஜெக்ட் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமாக இருக்கும்.90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி,ஆக்ஷன் படங்களில் நடித்து பிரபலமானார். அவரைப் போல் இதில் முழுநீள ஆக்ஷன் ஹீரோயினாக நான் நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்க தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நானே நடித்திருக்கிறேன் என்றார்.