‘பட்டர்ஃபிளை’யாக மாறிய சாந்தினி

‘பட்டர்ஃபிளை’யாக மாறிய சாந்தினி
சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக வீடியோ ஆல்பம் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு பட்டர்ஃபிளை என்ற ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. காந்தாரா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த ஆல்பம் பாடலில் சாந்தினி மற்றும் ஷ்ரதா ராவ், விஷ்ணு ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் மதியழகன் நடித்துள்ளார். கவிஞர் மணி எழுத அச்சுராஜா மணி இசையமைத்துள்ளார்.கதாசிரியர் வி. கார்த்திக் குமார்இயக்கியுள்ளார்.இன்று
பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு இந்த பட்டர்ஃபிளை ஆல்பம் வெளியாகிறது.

Comments (0)
Add Comment