பிரபலங்கள் வெளியிட்ட பாலன் தி பாய் பட டிரெய்லர்

பிரபலங்கள் வெளியிட்ட பாலன் தி பாய் பட டிரெய்லர்
சிதம்பரம் இயக்கத்தில், ஜீத்து மாதவன் எழுதிய “பாலன் தி பாய்” படத்தை கே.வி. என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 19 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.கேன்ஸ் திரைப்பட விழாவின் திரையிடலுக்குப் பிறகு, “பாலன் தி பாய்” படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இப்படத்தின் டிரெய்லரை முன்னணி நடிகர்களால் பல மொழிகளில் வெளியிடப்பட்டது.அஜய் தேவ்கன் (இந்தி), சூர்யா (தமிழ்), நாக சைதன்யா (தெலுங்கு), ராஜ் பி.ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்து, படத்திற்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment