ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய போனி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். இவர் பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இவரின் மகள்களான ஜான்விகபூர், குஷி கபூர் ஆகியோர் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.இந்நிலையில் போனி கபூர் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக உடற்பயிற்சி மற்றும் சிகிச்சை இன்றி உணவு பழக்கங்கள் மூலம்
தனது உடல் எடையை குறைத்துள்ளார். அதோடு ‘டிரஸ்’ விஷயங்களிலும் இன்றைய தலைமுறை அணியும் ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து 71 வயதில் ஸ்டைலாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை அவரது மகள் ஜான்வி கபூர் பதிவிட்டு ஆஹா அப்பா.. என ஆச்சரியமாக கூறியுள்ளார்.