EPS சுற்றுப் பயணத்தில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு

EPS சுற்றுப் பயணத்தில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்துள்ளார்

மேலும் சுற்றுப்பயணத்தின் போது மாவட்ட வாரியாக உள்ள பாஜக முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் ஆகியோர் EPS சுற்றுப்பயணத்தில் பங்கேற்க அழைப்பு

எந்த விதமான சமூக பிரச்சினைகளையும் அதிமுக, பாஜக இணைந்தே குரல் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இருவருக்குமான பிணைப்பு உறுதியானது என்பதை வெளிக்காட்டவும், சட்டமன்ற தேர்தலை வலுவாக சந்திக்கவும் அதிமுக, பாஜக கூட்டணி திட்டம்

அமித்ஷா நிகழ்ச்சிக்கு பிறகு EPS சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் நயினார் நாகேந்திரன்

வரும் 6 ஆம் தேதி சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 7 ஆம் தேதி SRM வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்

அந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள நயினார் நாகேந்திரன், நிகழ்ச்சிக்கு பின்னர் EPS சுற்றுப்பயணத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்

Comments (0)
Add Comment