பைக்கர்-விமர்சனம்
ஷர்வானந்த், தனது மனைவி மாளவிகா நாயர்,மகன் இஷானுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் ஒரு சிறிய பள்ளி சண்டை, அவரின் பழைய ரகசியத்தை கிளறுகிறது.இதற்கிடையில், அவரது தந்தை ராஜசேகர் எதிர்கொள்ளும் அவமானத்தால் மீண்டும் மோட்டோகிராஸ் ரேஸிங் களத்தில் குதிக்கிறார் ஷர்வானந்த்.அதன் பிறகு நடக்கும் உணர்ச்சிகரமான போராட்டம் தான் படத்தின் மீதி கதை. ஷர்வானந்த் ரேஸிங்கில் காட்டும் உழைப்பை கொடுத்துள்ளார்.தனது அனுபவ நடிப்பால் ராஜசேகர் கவர்கிறார்.மாளவிகா நாயர் எதார்த்த நடிப்பு ரசிக்க வைக்கிறது. சினிமாவில் அதிகமாக பயன்படுத்தப் படாத மோட்டோகிராஸ் விளையாட்டை மையமாகக் கொண்டு கதை உருவாக்கி, வழக்கமான ஸ்போர்ட்ஸ் டிராமா போல இருந்தாலும், திரைக்கதையை விறு விறுப்பாக நகர்த்தி ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி. யுவராஜ் ஒளிப்பதிவில் ரேஸ் காட்சிகள் மற்றும் ஜிப்ரான் இசையில் பாடல்கள், பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.