வரலாற்றுப் படமாக உருவாகும் ‘பாரதவர்ஷா ‘

வரலாற்றுப் படமாக உருவாகும் ‘பாரதவர்ஷா ‘
தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் ‘பாரதவர்ஷா’. இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்க, ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க, பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் படக்குழு வெளியிட்ட டைட்டில் கிளிம்ப்ஸ்க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘வீர ஜெயதீரா’ வெளியானது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் லட்சுமி மேகனா பாடியுள்ளனர். பாடலாசிரியர் சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். காஷ்மீரில் படமாக்கப் பட்டுள்ள இந்தப் பாடலின் காட்சிகள் அழகுடன் அமைந்து ள்ளன.

Comments (0)
Add Comment