சேயோன் படத்தில் எஸ்கேவுக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போஸ்

சேயோன் படத்தில் எஸ்கேவுக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போஸ்
தாய்க்கிழவி பட இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘சேயோன்’ படத்தில் ஹீரோயினாக பாக்கியஸ்ரீ போஸ் நடிக்க உள்ளார். பாக்கிய ஸ்ரீ யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறியதுடன் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக பட குழு அறிவித்துள்ளது. கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் படமாக உருவாகும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் பாக்கியஸ்ரீ போஸ் இதற்கு முன்பு காந்தா படத்தில் மூலம் தமிழில் அறியப்பட்டார் இருப்பினும் இதுதான் அவரின் நேரடி தமிழ் படமாகும்.

Comments (0)
Add Comment