பாகுபலி படம் பெரிய ரிஸ்க்: தமன்னா ஓபன் டாக்

பாகுபலி படம் பெரிய ரிஸ்க்: தமன்னா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை தமன்னா. இப்போது பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ‘பாகுபலி’ படம் குறித்து அவர் பேசியது, இப்போது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் போது பாகுபலி படத்திற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் சரியானதாகவே தோன்றுகிறது. அந்த சமயம் ஒரு பிராந்திய மொழி படத்திற்காக 200 கோடி செலவு செய்வது என்பது ஒரு ஆபத்தான முயற்சியாகவே பார்க்கப்பட்டது. காரணம், ஒருவேளை படம் வணிக ரீதியாகத் தோல்வியடைந்தால் அதிலிருந்து மீள்வது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. மேலும், அது மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும். ஆனால், இயக்குநர் ராஜமவுலி தொலைநோக்கு பார்வையுடன் இப்படத்தை உருவாக்கினார். அந்த உறுதியும், நம்பிக்கையும் தான் இந்த படத்தை உலக அளவில் கொண்டு சேர்த்து. மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றார்.

Comments (0)
Add Comment