அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ பட டிரெய்லர் ரிலீஸ்
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை தூண்டி உள்ளது.இந்த படத்தை 20 யத் செஞ்சுரி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.