ரஜினி படத்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து
ஜெயிலர்-2 படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை கமல் தயாரிக்க சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. திடீரென கதை பிடிக்காததால் சுந்தர் சி அதிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தயாரிப்பாளரும் நடிகருமான கமல் அறிவித்தார். இந்த நிலையில் ரஜினி 173 படத்தின் இயக்குனர் யார்? என எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டது. தற்போது ரஜினியின் 173-வது படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் ஒரு கதையை ரஜினியிடம் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். அந்தக் கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாம். இதனைத் தொடர்ந்து கமலை சந்தித்து பட தயாரிப்பு குறித்து பேசும்படி ரஜினி கூறியிருக்கிறார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.