ஒரு கிரியேட்டராக நான் நினைப்பதை படம் எடுக்க எனக்கு உரிமை உண்டு:விக்னேஷ் கார்த்திக்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த 23-ந் தேதி திரைக்கு வந்த படம் ஹாட்ஸ்பாட்-2 மச் .கே.ஜே.பி. டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதைதொடர்ந்து படத்தில் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது.இதில் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் பேசியது,படத்தில் தம்பி ராமையா தொடர்பான காட்சி எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். நான் அதை உண்மையாகவே மதிக்கிறேன். ஆனால் சிலர் குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு கருத்துக்களை பதிவிடுகி ன்றனர்.அவர்களுக்கு நான் சொல்ல விரும்பு வது உங்கள் கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது.அதே போல் நான் கூறிய கருத்தை தவறு என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை. ஒரு கிரியேட்டராக நான் நினைப்பதை படம் எடுக்க எனக்கு உரிமை உள்ளது என்றார்.