ஆர்யாவின் ஆனந்தன் காடு படம் 25ல் ரிலீஸ்
ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆனந்தன் காடு.இதில் ஆர்யா,நிகிலா விமல், இந்திரன்ஸ், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீ கோகுலம் மூவிஸ், மினி ஸ்டுடியோ மற்றும் தி ஷோ பீப்பிள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் 25-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஆர்யா பேசியது, கேரளா- தமிழ்நாடு எல்லைப் பகுதியான திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் கதை இது.இந்தப் படத்தில் நான் ஒரு தமிழர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனவே படத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் இயல்பாக இடம்.இப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும், திரைக்கதை ரீதியாகவும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.படத்தை 2 பதிப்புகளாக வெளியாகிறது. மலையாள வசனங்கள் இடம்பெறும் அசல் பதிப்பும், அவற்றை தமிழில் டப்பிங் செய்த மற்றொரு பதிப்பு தமிழிலும் ரசிகர்களுக்காக வெளியாகிறது. இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்றார்.