சென்னையில் அரசன் பட ஷூட்டிங் சிலம்பரசன் டி.ஆர் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி,விக்ராந்த்
கிஷோர்,சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். மதுரையில் நடைபெற்ற இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதில் ‘மதுரை டைகர்’ என்ற கேரக்டரில் கபடி விளையாட்டு வீரர்களுக்கான சீருடையில் சிம்பு நடித்தார்.இப்போது சென்னை தி. நகர் பகுதியில் நடக்கும் 2ம் கட்ட ஷூட்டிங்கில் சிம்பு பங்கேற்று நடித்து வருகிறார்.இது தொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.