கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய அனுபமா பரமேஸ்வரன்
பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். இந்த நிலையில் தில்லுஸ்யகொயர் என்ற தெலுங்கு படத்தில் வில்லி கேரக்டரில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி உடைகள், முத்தக்காட்சி களில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திரு ந்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் அளித்த பேட்டியில்,நான் படங்களில் இதுவரை கவர்ச்சியாக நடித்ததில்லை.முதன்முதலாக இதில் கவர்ச்சியாக நடித்தது எனக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. கவர்ச்சியாக நடிப்பதற்கு நீண்ட நேரம் நான் யோசித்து தான் முடிவெடுத்தேன்.படம் வெளியானதும் ரசிகர்களிடம் இருந்து நிச்சயம் எனக்கு விமர்சனங்கள் வரும் என எதிர்பார்த்தேன். அதுதான் நடந்தது என்றார்.