தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் அனுபமா பரமேஸ்வரன்
கேரளா திருச்சூரை சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன், பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் படத்தின் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்துள்ள அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடிக்க முடியாமல் போனது இன்று வரை எனக்கு வருத்தமே. பின்னர் அவர் ‘மாமன்னன்’ படத்திற்கும் என்னை அணுகினார். ஆனால் அப்போது கூட நான் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. ஆனால் இப்போது அவர் இயக்கத்தில் ‘பைசன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.