நடிகர் சங்கத்துக்கு மீண்டும் எச்சரிக்கை

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் எச்சரிக்கை
நடிகர்கள் லாபத்தில் பங்கு என்ற முறையில் நடிக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து கடந்த 3 வருடங்களாக நடிகர் சங்கம் எந்த முடிவும் எடுக்காததால்,பொருளாதார இழப்பு ஏற்படும் என தெரிந்தும் அடையாள வேலைநிறுத்தம் என முடிவு செய்துள்ளோம். எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வோம், புறக்கணிக்கும் பட்சத்தில் 2ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடக்கும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment