ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்க்கு அனிருத் இசை
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான அரவிந்த சமேத வீரராகவாக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகிறது.புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வு கள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்ட மான கட்டமைப்புடன் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதா கிருஷ்ணா மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர்.